தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது . விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, பெரியநாயகி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வான அழைத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.