கல்விக்காக அமைந்த முதல் கோவில் எது தெரியுமா?
முதல் கோவில் கல்வி தெய்வத்திற்கு கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.
இது ஹயக்ரீவரின் முதல் கோவில் ஆகும். இந்த கோவிலின் சிறப்பு அம்சமே பிரார்த்தனைக் கிணறு இருக்கிறது.
அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.விஷ்ணு தன்னை வழிபட்டு வரும்படியும்,தக்க சமயத்தில் உதவுவதாகவும் வாக்களித்தார்.அதன் படி ,சக்கராயுதத்தை ஏவினார்.அது அசுரர்களை அழித்தது.
தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவில் இத்தலத்தில் விஷ்ணு காட்சியளித்தார்.தேவர்களின் தலைவன் என்ற பொருளில் தேவநாத சுவாமி என பெயர் ஏற்பட்டது.
ஒரு முறை விஷ்ணுக்கு தாகம் ஏற்பட்ட பொது,கருடனிடம் தண்ணீர் கொண்டுவரப் பணித்தார்.அவர் எடுத்த வர தாமதம் ஆனதால் ஆதி
சேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்கு பிரகாரத்தில் கிணறாக உள்ளது.
இத்தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது. பிரார்த்தனைக் கிணறாக இருக்கும் இதில் உப்பு,மிளகு வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர்.
இங்கு வழிபட சர்ப்ப தோஷம் விலகும்.திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இத்தலத்திற்கு அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது. இது 73படிகளை கொண்டது. இங்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சன்னதி உள்ளது.
வேதாந்த தேசிகன் மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர், கருடாழ்வார் அவர்களின் தரிசனத்தை பெற்றார். வியாழக்கிழமை தோறும் மாணவர்கள் ஹயக்ரீவருக்கு துளசி,கல்கண்டு,தேன் படைத்து வழிபடுகின்றனர்.
Leave a Comment