ராகு தோஷம், திருமண தடை நீக்கும் தலம்!
ஆற்றூர் என்ற ஊரில் திருமண தடைகளை நீக்கி ,திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இந்த ஊரில் இறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்த ஒரு மங்கை, தான் நினைத்த படியே கடவுளை மணந்து கொண்டாள். இந்த பெருமையை கொண்ட திருத்தலத்தில் சென்று வழிப்பட்டால் உங்கள் திருமண தடை நீங்கும் என ஐதிகம் உள்ளது.
இக்கோவிலின் தல வரலாறு பார்ப்போமா!
ஆற்றூரில் வசித்து வந்த சிவ பக்தரின் மகள் தான் கயற்கண்ணி. அவள் திருமண வயதை எட்டியவுடன் அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஆனால் அப்பெண் மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை தான் மனதார நேசிக்கிறேன். அவரை தான் மனந்து கொள்வேன் என உறுதியாக கூறிவிட்டாள். பெற்றவர்களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவாத? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
அவளின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர். ஆனால் கயற்கண்ணியோ தன் முடிவிலுருந்து பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே முழு மனதோடு நினைத்து பூஜித்து வந்தாள்.அவரின் நினைவிலே தன் நாட்களை கடத்தினாள்.
அப்பெண்ணின் மன உறுதியை கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார்.அவரின் பார்வை கயற்கண்ணியை நோக்கி திரும்பியது. அப்பெண்ணை மணந்து கொள்ள முடிவு செய்தார்.
சிவ பெருமான் ஒரு பிரமசாரியின் வேடம் புண்டு ,தேவர்கள் சூழ தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று ஆற்றூரில் எழுந்தருளி கயற்கண்ணியை மணந்தார்.
சிவ பெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
ஆலய அமைப்பு!
இத்தலத்தின் பழைய பெயர் மந்தாரவனம், தற்போது ஆற்றூர் என அழைக்கபடுகிறது. சொர்ணபுரிஸ்வர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.ஆலயத்தின் ஏதிரில் திருக்குளம் உள்ளது.இக்குளம் கயிலாய திர்த்தம் எனவும் ,மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த திர்த்தத்தில் நீராடி இறைவன்,இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம்,கால சர்ப்ப தோஷம்,ராகு தோஷம், அனைத்தும் விலகும் என பக்தர்களின் நம்பிக்கை.
கோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகிறது.
அடுத்தது மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள்.ஆடுத்துள்ள கருவறையில் சொர்ணபுரிஸ்வர் சிவலிங்கத் திருமேனில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார். இத்திருச்சுற்றில் தெற்கில் அன்னை அபயாம்பிகை தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள், நர்த்தன விநாயகர் , தட்சணா மூர்த்தியும்,மகா விஷ்ணுவும் ,அஷ்ட புஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்
சிறப்பு பவுர்ணமி பூஜை!
இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் ஜாதகத்தை இறைவன் பாதத்த்தில் வைத்து பூஜை செய்து,திரும்ப வாங்கிச் செல்கின்றார். இதை செய்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும்.
மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க, இத்தல இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார். இத்தலத்தின் அருகில் சுகவாசி நாராணய பெருமாள் என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.
எனவே இந்த ஆலயத்தில் சிவ விஷ்ணு பேதம் இல்லை.
இந்த ஆலயத்தில் , சோமவாரங்கள்,சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி,பிரதோஷம்,சோமவாரம் கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும்,இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும் ஆராதானைகளும் நடைப்பெற்று வருகின்றன.
Leave a Comment