திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் வெளிப்பிரகாரத்தில் கற்கள் பதிக்கும் பணி .
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் புகழ் பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள இக்கோயிலுக்கு, சனி தோஷம் நீங்க வேண்டி, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி அரசால், திருநள்ளாறு கோயில் நகர திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை கொண்டும் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அளித்த நன்கொடையை கொண்டு , சுமார் 60 லட்ச ரூபாய் செலவில் சனீஸ்வரன் கோயிலின் வெளிப்பிரகார தளத்தில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்தார். முன்னதாக வெளிப்பிரகாரத்தில் பதிக்கப்படும் கற்களுக்கு விஷேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனையும் காட்டப்பட்டது. விஷேஷ காலங்களில் சிறப்புக் கட்டண வரிசையில் செல்வோர்களுக்கான பாதையிது என்பது குறிப்பிடதக்கது.
Leave a Comment