கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா


இந்த ஆண்டு குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இதனையொட்டி, குவாகம் கிராமத்தைச் சுற்றியுள்ள நத்தம், மடப்பட்டு, பெரியசெவலை, அரசூர், திருவெண்ணைநல்லூர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூழ் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று கூத்தாண்டவருக்கும், மாரியம்மனுக்கும் கூழ் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
வரும் மே மாதம் 4-ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைப்பெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 1-ஆம் தேதியும், அதனைத்தொடர்ந்து 2-ஆம் தேதி அரவான் களபலி கொடுக்கும் நிகழ்ச்சியும், கூத்தாண்டவர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து விதவை கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் கலந்து கொள்ள தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருகை புரிந்துள்ளனர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்குபெறும் 'மிஸ் கூவாகம்' அழகி போட்டி, பேஷன் ஷோ, நடனப் போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.



Leave a Comment