திருப்பதியில் அபூர்வ நிகழ்வு.....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் 3–ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 11–ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் 5–வது நாளில் ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள்.
வருகிற 7–ந் தேதி கருடபஞ்சமி விழா நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தங்க கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 18–ந் தேதி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி விழா நடக்கிறது. அன்றைய தினமும் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
எனவே இந்த மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் 2 கருடசேவை நிகழ்ச்சிகள் நடப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
Leave a Comment