மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 11.30 மணிக்கு பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன் மேளதாளம் முழங்க பலத்த கரகோஷத்துக்கு இடையே ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர், கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனுக்கு தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் தங்களது கைகளில் எலுமிச்சை மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
Leave a Comment