திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதத்தின் முதல் நாளிலேயே 4 கோடியே 24 லட்ச ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதியில் கோயில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு மனை, நிலப்பத்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக உண்டியல் மூலம் மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.1,300 கோடியும், ஒரு டன் தங்கமும், 1,500 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து வருகிறது.
நடப்பாண்டு கடந்த ஜூலை 18-ம் தேதி ரூ.4.69 கோடி உண்டியல் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச வருவாய் கிடைத்தது. இதேபோன்று ஜூன் 27-ம் தேதி ரூ.4.22 கோடியும், ஜூலை 28-ம் தேதி ரூ.4.03 கோடியும் வருவாயாக கிடைத்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 முதல் 3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment