பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்சி....


குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை- திருவள்ளுர் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் அருகே உள்ள பாடியில் அமைந்துள்ளது திருவலியதாயம் திருத்தலம்.
தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 21-வது தலமாகும். மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு திருவலிதாய நாதர், வல்லீசர் எனவும், அம்மன் தாயம்மை, வடமொழியில் ஜகதாம்பாள் எனவும் திருநாமம் கொண்டு அருள்புரிகின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் வியாழபகவான் தனிசந்நதியில் கோயில் கொண்டுள்ளார்.
இது முக்கிய குருஸ்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னியா ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு ஆகஸ்டு 1 முதல் 3 வரை லட்சார்ச்சனை விழாவும், ஆகஸ்ட் 2-ம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று ஒரு நாள் மட்டும் குரு பரிஹார ஹோமமும் நடைபெறுகின்றது.
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி ஆகஸ்ட் 02ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 01.09.2017 வரை கன்னி ராசியில் இருப்பார் குருபகவான். இந்த குருபெயர்ச்சிக்கு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ஆகும்.
குரு பரிஹார ஹோமங்களிலும், லட்சார்ச்சனையிலும் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 044-26540706



Leave a Comment