60 ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறப்பான குருபெயர்ச்சி


ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று நிகழ்வுகளும் வருவது மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. அதுவும் 60 ஆண்டுகளுக்கு பின், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்த 3 விசேஷ நாட்களும் ஒரு சேர வருகிறது.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளில், மேட்டூர் காவிரியாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். வரும் ஆகஸ்டு 2ம் தேதி ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று முக்கிய நிகழ்வுகளும், ஒரே நாளில் வருகிறது.
இந்த அபூர்வ நாளில் தட்சிணயான புண்யநதியான காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். இதுதவிர குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம், தர்மம் செய்யலாம். குருபெயர்ச்சி நாளில் காவிரியில் நீராடுவதால் பெரியவர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும். இந்த நாளில் காவிரியில் நீராடுவதால், மூன்று புண்ணியங்கள் ஒரே நாளில் கிடைக்கும். மூன்று நிகழ்வுகள் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் காவிரியாற்றில் குடும்பத்துடன் புனித நீராட பக்தர்கள் விரும்புவர்.



Leave a Comment