கோதண்டராமர் கோயில் பிரமோற்சவம்
ஆரணி ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரணி டவுன் கொசப்பாளையம் தியாகி சுப்பிரமணிய சாஸ்திரியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கர்போஸ்வ 10ம் ஆண்டு பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணர், வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பட்டாச்சாரியார்கள் கொடியேற்றினர். அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மேளதாளம் நாதஸ்வர இசையுடன் கோயில் உட்பிரகாரம், மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினசரி இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தேர் உலா, குதிரை வாகனம் மற்றும் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
Leave a Comment