திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதொறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய் கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் வெங்கடேஸ்வர சுவாமியை துழில் எழுப்பபட்டு தோல்மலை, அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் அனுமதிக்காமல் அர்ச்சகர்கள் மட்டும் ஏகாந்தமாக செய்தனர். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தில் முடப்பட்டு ஆனந்த நிலையம், கொடிமரம், மகாதுவாரம், ரங்கநாதர் மண்டபம், சம்பங்கி மண்டபம் என அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திருச்சூணம், பச்சைகற்புரம், கிச்சிலி கட்டை, சந்தனம், குங்குமம் ஆகிய மூலிகை பொருட்களை கொண்டு செய்யப்பட்டு கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.



Leave a Comment