திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம்


திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் மார்ச் 15-ஆம் தேதி தொடங்கியது. 4-ஆம் நாளான சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8-ஆம் நாளான புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் அருள்பாலித்தார். காலை 8 மணிக்கு புறப்பட்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. வழிநெடுகிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது.



Leave a Comment