திருப்பரங்குன்றத்தில் உற்சவர் சாந்தி பூஜை


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் நிறைவாக, உற்சவர் சாந்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இக் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 16 ஆம் தேதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 17 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. விழா நிறைவடைந்ததையொட்டி, உற்சவர் சாந்தி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, திருவாச்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தெய்வானையுடன் சுவாமி ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.



Leave a Comment