காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாணம்....


நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வரும் அக்டோபர் 27ம் தேதி காலை 8 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசுக் காட்சி கொடுத்தல், இரவு 7.20 மணிக்கு சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.



Leave a Comment