திருப்பரங்குன்றம் கோயில் கருவறை குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது...


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் 42 லட்ச ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் கருவறையில் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது.
குடவரைக் கோயிலான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குடவரை கோயில் என்பதால் மலை மீதுள்ள வெப்பம் அப்படியே சன்னதிக்குள் இறங்குகிறது. இதனால் கோயிலுக்குள் அதிகளவில் வெப்பம் இருக்கும். கோயில் கருவறையில் சில ஆண்டுகளுக்கு முன் கருவறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.
சில மாதங்களிலேயே அது பழுதானது. இதையடுத்து தற்போது கோயில் நிர்வாகத்தின் முயற்சியால் உபயதாரர் மூலம் ரூ.42 லட்சம் செலவில் 30 டன் அளவிலான நவீன வகை குளிர்சாதனங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.



Leave a Comment