ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் விரிவாக்கம்....
ஒருகால பூஜை நிதித் திட்டத்தை விரிவுபடுத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டில் 241 கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருக்கோயில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற நோக்கில், ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறிய அவர், இந்தத் திட்டம் நிகழாண்டில் 241 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், பக்தர்களின் வசதிக்காக அனைத்து திருக்கோயில்களிலும் நவீன கழிவறை, குளியல் அறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அதிக அளவு பக்தர்கள் வருவதால் விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Comment