திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ....


வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
இந்தத் தூய்மைப்பணி வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம் ஆகிய தினங்களை முன்னிட்டு விழா தொடங்கும், முதல் வார செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்தநிலையில் அக்டோபர் 3–ந்தேதியில் இருந்து 11–ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

முன்னதாக அதிகாலை கோவிலில் பூஜைகள் முடிந்ததும், மூலவர் ஏழுமலையான் மற்றும் போக சீனிவாசமூர்த்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்தி விக்ரகங்களை அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரத்தால் போர்த்தினர்.

அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் வைதீக பூஜைகள், காரிய கர்மங்கள், சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி கண்பிக்கப்பட்டது.



Leave a Comment