தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந் திருவிழா


அழகர்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வரும் 3 ஆம் தேதி புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி பெருந்திருவிழா ஆகும். அதன்படி இந்த வருட புரட்டாசி பெருந்திருவிழா வருகிற அக்டோபர் 3–ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்கு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று மாலையில் பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளி புறப்பாடாகிறார். மறுநாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று, புதன்கிழமை காலையில் ராமாவதாரமும், இரவு அனுமார் வாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் வியாழக்கிழமை காலையில் கஜேந்திர மோட்சமும், அன்றிரவு கருட வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது.

அக்டோபர் 7ஆம் தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷவாகனத்திலும், 8–ந்தேதி காலை மோகனாவதாரமும், அன்றிரவு யானை வாகனமும். ஞாயிற்றுக்கிழமை காலையில் சேஷசயனத்திலும், அன்றிரவு புஷ்ப விமானத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
அக்டோபர் 12–ந்தேதி காலையில் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு சப்தாவர்ண பூச்சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 13–ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 14–ந் தேதி காலை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி க.செல்லத்துரை உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment