சதுர்த்தி விழாவுக்குத் தயாராக, பாகுபலி விநாயகர்!
வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருப்பதையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் ஏராளமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஐம்பது ரூபாய் முதல் இருபது லட்ச ரூபாய் வரை இங்கே உருவாக்கப்பட்டும் விநாயகர் சிலைகளில் இந்த வருடப் புதுமை... ’பாகுபலி விநாயகர்’. சிவ லிங்கத்தை விநாயகர் தோளில் தூக்கிச் செல்வது போன்ற பாகுபலி படக்காட்சி, இந்தச் சிலையில் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பஞ்சபூத விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், சூரன் விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், அர்த்தநாரீஸ்வர விநாயகர் என இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் வித்தியாசங்களுக்குப் பஞ்சமில்லை.
சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் காகிதக் கூழ், கிழங்குமாவு உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இப்பகுதியில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வாங்கிச் செல்வதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Leave a Comment