சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு....
திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.
திருமலைக்கு வரும் பக்தர் களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆன்லைன் சேவை டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படுவதாகவும், இதன் மூலம் வெளி மாநில பக்தர்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக விரைவில் திருமலையில் காம்ப்ளக்ஸ் கட்டப்படும் எனவும் இந்த காம்பளக்ஸில் அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் சுவாமியை தரிசிக்கலாம் என்றும் கூறினார்.
அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.
Leave a Comment