கிருஷ்ண ஜெயந்திக்காக பத்தாயிரத்து எட்டு ஓவியப் பானைகள்....
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அழகழகாய் ஓவியங்கள் வரையப்பட்ட 10 ஆயிரத்து எட்டு பானைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுடலை குடும்பத்தினர் சிறிய ரக 9 ஆயிரம் பானைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பரப்பாடியைச் சேர்ந்தவர்கள் 1008 பெரிய ரக பானைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்த மறுநாளே அடுத்த ஆண்டிற்கான பானைகள் தயாரிக்கும் பணியை இவர்கள் துவங்குகின்றனர்.
ஒவ்வொரு பானையையும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment