திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


நான்கு நாள் தொடர் விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வாரத்தின் 2–வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே தரிசன வரிசைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 21 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். ஒரேநாளில் மொத்தம் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 9 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 7 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 14 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment