சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ யாகம்.....
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விசேஷ யாகம் வரும் 17-ந்தேதி தொடங்குகிறது.
நாட்டுமக்கள் நலனுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரார்த்தனா உபவாசம் என்ற விசேஷ யாகம் நடத்தப்படுவது வழக்கம். வருகிற 17-ந்தேதி சபரிமலை சன்னிதானத்தில் இந்த விசேஷ யாகம் நடைபெற உள்ளது.
கோவிலின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் இந்த யாகத்தை நடத்த உள்ளனர். இந்த யாகத்தையொட்டி பம்பை கணபதி கோவில், மாளிகை புரத்தம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்படும்.
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விசேஷ பூஜைகள், திருவிழாக்களின் போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
Leave a Comment