சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை


சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்ட கோயில் நடை 8 ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அண்மையில் ஆடி மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது.

அதன் பிறகு, நிறை புத்தரிசி பூஜைக் காக நடை திறக்கப்பட்டது. அச்சன்கோயிலில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலமாக சபரிமலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, மாலையில் பம்பை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்தும் நெற்பயிர்கள் கொண்டு வரப்பட்டன.
அச்சன்கோயிலில் இருந்து நிறை புத்தரிசி பூஜைக்கு நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறை.
பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை பூஜையறையில் கட்டி வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்



Leave a Comment