அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு?


ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?

வைணவ சான்றோர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி, தாயார் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜர் தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ச்சி பெற்றார். 16 வயது தாண்டிய போது தந்தையை இழந்த இவர் 17 வயதில் தஞ்சம்மாள் என்பவரை மனம் முடித்தார். பின்னர் யாதவப்பிரகாசர் என்பவரிடம் வேத கல்வியை பயின்றார்.

ஆனால் ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராமானுஜரை கொன்று விடுவதற்கு அவருடைய குரு திட்டமிட்டார். அதன் பின், ராமானுஜர் திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து வேத பாடங்களை கற்க தொடங்கினார். அங்கு பல அவமானங்களை சந்தித்த பின், தனது குருவான திருக்கச்சி நம்பிகள் இடம் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர்.

இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று குருநாதர் திருக்கச்சி நம்பிகள் கூறிய போதும், அதனை பொறுப்பெடுத்தாமல் உலகத்திற்கு எடுத்துரைத்தார். “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமாலின் மந்திரத்தை எடுத்துரைத்தார். தன் குருவான திருக்கச்சி நம்பிகளின் வார்த்தையை மீறி, உலகிற்கு எடுத்துரைத்தார். இதனால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், ராமானுஜர் தன் கடைசி காலம் வரை எம்பெருமானுக்கு தொண்டுகள் புரிந்து, 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். மறு தினமே உடல் மேலெழுந்து வந்தது, இது அனைவரையும் வியக்க வைத்தது.

தியானம் செய்தபடி அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தைலம் தடவப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் இவருக்கு வழிபாடு நடந்த பின்னரே, ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்



Leave a Comment