பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் சிவன்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆதிசேஷன் வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அதனை தான் அருந்திய கதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், விஷத்தை உண்ட சோர்வில் சிவன் பார்வதியின் மடியில் ஒரு மழலையே போல் படுத்து உறங்கிய இடம் எங்கே உள்ளது தெரியுமா? வாருங்கள் அங்கு செல்லலாம்.
தேவலோகத்தில் ஒருமுறை இந்திரன் மகாவிஷ்ணுவின் உதவியோடு அமிர்தம் வேண்டி பாற்கடலை கடையை முற்பட்டான். தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மற்றொரு புறமாக நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். போட்டி போட்டு கொண்டு இரு தரப்பினரும் வாசுகி பாம்பை பிடித்து இழுத்ததால், வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்து தங்களைக் காப்பாற்றுமாறு அனைவரும் கதறினர். சிவபெருமானால் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை சேகரித்து கொண்டுவர அனுப்பினார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய விஷம் அனைத்தையும் பந்து போல் உருட்டி, சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். சிவன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் செல்வதை தடுக்க, சிவனின் கழுத்தை பார்வதி தேவி இறுக்கமாக கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். இதனால் விஷம் சிவனின் தொண்டையிலே நின்று விட்டது. இதன் காரணமாகத்தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று போற்றுகிறோம்.
விஷத்தை அருந்திய பின்னர், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் போகும். வழியில் அவருக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் அவர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க உறங்கிய அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ளது அருள்மிகு ஸ்ரீ சர்வ மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பள்ளிகொண்ட ஈஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள மூர்த்திகள் பலர் குடும்ப சமயத்தைத் தரராக காட்சியளிப்பது தனி சிறப்பு. வைணவத் தலங்களில் ஆதிசேஷன் மீது அரங்கநாதன் சைனகுளத்தில் காட்சி அளிப்பது போன்று, சிவபெருமான் இங்கு மங்களாம்பிகையின் மடியில் ஒரு மழலையை போல் பள்ளிகொண்ட ஈஸ்வரராக சயன கோலத்தில் காட்சியளிக்கும் சிறப்புடைய ஒரே கோவில். உமையவள் ‘சர்வமங்களா அம்பிகை’ என்ற திருப்பெயருடன் அருள் புரிய.
பிரகார வளாகத்தில் நந்தீஸ்வரர், பிருகு முனிவர், பிரம்மதேவன், ஸ்ரீ மகாவிஷ்ணு, மார்க்கண்டேயன், நாரத மாமுனி, சந்திரன், சூரியன், குபேரன், அகத்திய மாமுனிவர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களோடு விநாயகப் பெருமான், வள்ளி-தெய்வயானை சகோதரராக முருகப்பெருமான் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.
- பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Comment