சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ?
மகாவிஷ்ணு இராவணனை அழிக்க எடுத்த அவதாரம்தான் இராம அவதாரம். கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்காக, கடற்கரைக்கு வந்த இராமரும் வானர சேனையும் கடலை எப்படி கடப்பது என்று குழப்பமுற்றனர். அப்போது கடல் மேல் பாலம் கட்டுவதென்று முடிவெடுத்து. அதற்கான செயலில் ஈடுபட தொடங்கினர்.
கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமருக்கு உதவ முன் வந்தன, அவைகள் தன்னால் முடிந்த கற்களை தூக்கிவந்து பாலத்தின் மீது போட்டது.சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய எண்ணி கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது.
என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, கம்பராமாயணத்திலோ, துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் பணியின் போது அணில் உதவியதாக எந்த தகவலும் இல்லை இது வெறும் கற்பனை கதையே இந்த கதையானது இந்திய மொழிகள் அனைத்திலும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Comment