என் பசி தீர உன் பங்கையும் தா" உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் !
என் பசி தீர உன் பங்கையும் தா" உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் !
எம்பெருமான் தனது அடியார்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், அதனால்தான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் அவர்களின் இருப்பிடத்திற்கு தேடிச்சென்று அருள்புரிவார். அந்த வகையில் புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் மாமுனிவர் தினமும் தவம் செய்த பின்னர், பெருமாளுக்கு அமுது படைத்த பின்பு தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் சாலிஹோத்ர முனிவரின் ஆசிரமத்திற்கு வயோதிகர் வடிவில் வந்த பெருமாள். வெகு தூரத்தில் இருந்து தான் வருவதாகவும், பசிக்கிறது உன்ன உணவேதும் கிடைக்குமா ? என கேட்க முனிவரும் உணவளிக்க பசி தீரவில்லை என முனிவரின் பங்கையும் கேட்டு சாப்பிட்டு முடித்ததும், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார்.
"படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. தற்போது அந்த இடம்தான் திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் கோவில் வரலாறு தெரிவிக்கிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் ஆகியோரால் அப்பா மாலை சூட பட்டதாகும், 5 பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் போற்றப்படுகிறார், வீரராகவ பெருமாள் சைனா கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார், மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.
மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் கருணையே வடிவாக காட்சி தருகிறார், ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதி கொண்டுள்ளனர். இங்கு உள்ள சாலிங்கிய மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று வீரராகவ பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை அன்று வீரராகவரை வழிபடுவது சிறப்பாகும்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Comment