கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி
விற்பனைக்காக கொண்டு வந்த வளையல்களை பறிகொடுத்த வணிகர் கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி, சர்ப்ப மாலை அணிந்து புற்றுக்குள் காட்சி தந்த அதிசயம்!
அம்மா வளையல் வாங்கலையோ வளையல் வளையல் வாங்கலையோ வளையல், ஏம்பா வளையல் காரரே குங்கும கலர் வலையில் இருக்கா இருக்கு தாயே எங்க மூட்டையை இறக்கு பார்க்கலாம், தலையில் மண்பாண்டத்துடன் நின்ற பெண் கூற தாயே சுட்டெரிக்கும் வெயில்ல வந்ததுனால தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா தாயே,, வளையல் காரரே பானையில் மோர் வச்சிருக்கேன் கொடுக்கவா, கொடுத்தாயே வாங்கி குடித்த வணிகர் இடம் தாகம் தீர்ந்ததா வளையல்காரரே திருந்தது தாயே ,, பாவம் வேகாத வெயில்ல நாலு தெருவு சுத்தி வந்து இருப்ப சத்த நேரம் இந்த வேப்பமரத்து நிழல்ல இளைப்பாறு அதுவும் சரிதான் தாயே,,
மரத்தடியில் உறங்கிய வணிகர் கண்விழித்து பார்த்த போது, அருகில் வைத்திருந்த வளையல் மூட்டைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மூட்டைகளை தேடியபடி ஆரணி ஆற்றின் கரையில் மாலை நேர வேலையில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றின் கரையில் இருந்த பெரிய புற்றில் இருந்து பாம்பு ஒன்று சீரியபடி படம் எடுத்து ஆடுவதைக் கண்டு, அச்சத்துடன் வலையில் மூட்டைகளை தேடும் முயற்சியை கைவிட்டு ஏமாற்றத்துடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது ஊருக்கு திரும்பிய அவரது.
ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கனவில் ஆதிபராசக்தி தோன்றி நான் ரேணுகாதேவி. பெரியபாளையம் ஆரணி ஆற்றின் கரையில் பவானியாக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டைகள் விழுந்துள்ள பாம்பு புற்றுக்குள் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். நீ பயப்பட வேண்டாம் இது எனது திருவிளையாடல் உடனே அங்குவா உனக்கு நான் காட்சி தருகிறேன் என கூறியதை கேட்டு திடுக்கிட்டு விழித்த அவர், மறுநாள் தனது உறவினர்கள் சிலருடன் அற்புதம் நிகழ்ந்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு வந்து ஊர் பெரியவர்களிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார், இதனைக் கேட்டு ஊர்க்காரர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஆரணி ஆற்றின் கரையில் உள்ள புற்றை நோக்கி சென்று கிடப்பாரையால் புற்றை இடிக்க முயன்ற போது" ணங்"என்று ஒரு சத்தம் கேட்டது.
கிடப்பாறையை வெளியில் எடுத்த போது அதில் ரத்தம் தென்பட்டது, அதோடு புற்றிலிருந்து ரத்தம் வழிந்தது இதைப் பார்த்து நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றி பார்த்தனர். அதில் சர்ப்ப மாலை அணிந்தபடி சுயம்பு ஒன்று தென்பட்டது அதன் மேல்பகுதியில் இருந்து தான் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.
உடனே வளையல் வணிகர் தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுகணம் ரத்தம் நின்று போனது சுயம்பு அணிந்திருந்த சர்ப்பமும் மறைந்தது இதனைடுத்து சுவைம்புவாக தோன்றிய அன்னை ஆதிபராசக்தி பவானி அம்மனுக்கு அதே இடத்தில் கோவில் கட்டிய ஊர் மக்கள் சுயம்பு வடிவ அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து இன்று வரை வணங்கி வருகின்றனர்,
இப்பொழுதும் அந்த வெள்ளி கவசத்தை அகற்றி விட்டுப பார்த்தால் சுயம்பு வடிவின் உச்சியில் கிடப்பாரையால் ஏற்பட்ட காயத்தின் தழும்பை காணலாம், இப்படி தன்னை வெளிப்படுத்தி பெரியபாளையத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் தன்னை நாடிவரும் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் புரிந்து வருவதால்.
தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பெரும் திரளான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பவானி அம்மனை பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். மேலும் ஆடி மாதம் 14 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருமுடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபடுகின்றனர்.
பிள்ளை பேரு இல்லாத தம்பதியர், திருமணம் ஆகாத பெண்கள், பவானி அம்மனுக்கு குங்கும நிற வளையல், சிகப்பு நிற சேலை, மஞ்சள் குங்குமத்துடன் நெய் தீபம் ஏற்றி அம்மனுக்கு தாம்பூல தட்டை காணிக்கை செலுத்தினால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, பொருட்செல்வம், கல்விச்செல்வம் ஆகியவற்றை பெற விரும்புவோர் ஏழு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து பவானி அம்மனை வழிபட்டால் எண்ணம் நிறைவேறும் என்பது திண்ணம்,
கோவில் நடை காளை ஆறு மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும், ஆடி மாதம் 14 வாரமும் இதே நடைமுறையில் கோயில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Comment