கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம்


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது.

கருவூர் ஸ்ரீ மகா அபிஷேகக்குழு சார்பில் 18 ஆம் ஆண்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை மிருத்தியுஞ்சய ஹோமத்துடன் தொடங்கியது. தீர்க்க ஆயுள்,நோய்கள் வராமல் காப்பது ஆகிய பல்வேறு மேன்மைக்காக இந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் மூலமந்திர ஹஸ்த்ர மிருத்தியுஞ்சய ஜபஹோமம், பூர்ணாஹூதி,மஹா தீபாராதனை,மூல ஆலய மிருத்தியுஞ்சொரூப பசுபதீஸ்வரர் சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு ராஜகோபுரத்துக்கு மாலை சாத்துதலும்,கரூர் மேட்டுத்தெரு பெருமாள் கோயிலுக்கு பெண் வீட்டு சீர்த்தட்டு அழைக்கப்பட்டு,முக்கிய வீதிகள் வழியே பசுபதீஸ்வரர் கோயிலை வந்தடையும் நிகழ்ச்சியும், அரசு இசைப்பள்ளி குமார சாமிநாதன் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.



Leave a Comment