ஆண்டாள் கோயில் தேரோட்டம்... விழாக்கோலம் பூண்ட திருவில்லிபுத்தூர்


திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெள்ளி கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் தினத்தன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்டு 5 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான நிகழ்ச்சிகள் கடந்த 28ம் தேதி துவங்கின. ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தனர்.
வெள்ளி கிழமை காலை 8.05 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சர்கள், அறநிலைதுறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர் சக்கரம் பதியாமல் இருக்க பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை ராம்கோ நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாகி அதிகாரி ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர்.



Leave a Comment