அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5ல் தொடக்கம்
விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
Leave a Comment