திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசிக்க....
திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கும் முறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை, கோவை, ஐதராபாத், புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர அரசின் சொகுசு பேருந்துகளில் செல்லும் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.
ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட் பெறும் திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமும், திருப்பதி மற்றும் தேவஸ்தானம் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இப்போது கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment