சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு புதிய அஷ்டபந்தனம்....
சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு அக்டோபர் மாதம் 22, 23-ந்தேதிகளில் புதிதாக அஷ்டபந்தனம் சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.
சமீபத்தில் சபரிமலை கோவிலை புனரமைப்பதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சபரிமலை, மாளிகைபுரத்து அம்மன் கோவில்களில் சில பணிகளை செய்ய ஐயப்பனின் உத்தரவு கிடைத்தது.
சுவாமி ஐயப்பன் விக்ரகம், மாளிகைபுரத்து அம்மன் விக்ரகம் ஆகியவற்றின் பீடத்தில் சாத்தப்பட்டுள்ள அஷ்ட பந்தனம் மூலிகையை மாற்றி புதியதாக அஷ்ட பந்தனம் சாத்த உத்தரவு கிடைத்தது.
இதை தொடர்ந்து புதிய அஷ்ட பந்தனம் சாத்தும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 22, 23-ந்தேதிகளில் சபரிமலையிலும், மாளிகைபுரத்திலும் நடைபெற உள்ளது.
Leave a Comment