நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?


புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். பெருமாளுக்கு சிறப்பு நெற்றியில் பளிச்சென இடப்படும் நாமம். இந்த நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?
நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது இந்த கிராமம்.. நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு என்ற கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுகின்றனர். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைத்து, ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்த உடன், மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுகின்றனர். அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்துவிடுகிறது. அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்பிறகு மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.



Leave a Comment