திருப்பதியில் நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு....


நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது.
நன்கொடை வழங்கும் பக்தர்களிடம் இருந்து டிடி அல்லது செக் மூலம் நன்கொடை பெறவேண்டும். வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நன்கொடை பெற அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும்.

நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்தில் இ-பாஸ் புத்தகம் வழங்கவேண்டும். அவர்களுக்கு நன்கொடை பிரிவு அலுவலகத்தில் சலுகைகளை பெற வழிகாட்டவேண்டும். என கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம், நன்கொடை வழங்குவோரின் விபரங்களை பதிவு செய்து, உடனே ரசீது வழங்கி, அவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவையை, தேவஸ்தானம் துவக்கி உள்ளது. நன்கொடை பெறப்பட்ட, 48 மணி நேரத்திற்குள், நன்கொடையாளர்களுக்கு, 'டிஜிட்டல் பாஸ்புக்' வழங்கப்படும். 'பாஸ்புக்' பெற்ற பின், ஏழுமலையான் தரிசனம், வாடகை அறை, கூடுதல் லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை, வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment