மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்டு 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிசேகம், செப்டம்பர் 11ல் பிட்டு உற்சவம் நடக்கிறது.
திருவிழா முக்கிய நிகழ்வுகள்....
ஆகஸ்டு 27ல் ஆவணி மூல திருவிழா வாஸ்து சாந்தி.
ஆகஸ்டு 28 காலை 8.30 மணிக்கு மேல் 8.54 மணிக்குள் கொடியேற்றம்.
ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 வரை: காலை, இரவு சந்திரசேகர் உற்சவம் 2ம் பிரகாரம் புறப்பாடு.
செப்டம்பர் 3 ஆவணி மூல உற்சவ முதல் திருநாள் கருங்குருவிக்கு உபதேசம்.
செப்டம்பர் 4 இரண்டாம் திருநாள் நாரைக்கு மோட்சமருளிய லீலை.
செப்டம்பர் 5 மூன்றாம் திருநாள் மாணிக்கம் விற்ற லீலை.
செப்டம்பர் 6 நான்காம் திருநாள் தருமிக்கு பொற்கிழியருளிய லீலை.
செப்டம்பர் 7 ஐந்தாம் திருநாள் உலவாக்கோட்டை.
செப்டம்பர் 8 ஆறாம் திருநாள் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தவித வரலாறு லீலை.
செப்டம்பர் 9 ஏழாம் திருநாள் வளையல் விற்ற லீலை, இரவு சுவாமி பட்டாபிஷேகம் (இரவு 7.05 மணிக்குள் 7.29 மணிக்குள்).
செப்டம்பர் 10 எட்டாம் திருநாள் நரியைப் பரியாக்கிய லீலை (குதிரை கயிறு மாறிய லீலை).
செப்டம்பர் 11 ஒன்பதாம் திருநாள் புட்டுத் திருநாள் (புட்டுக்கு மண் சுமந்த லீலை).
செப்டம்பர் 12 பத்தாம் திருநாள் விறகு விற்ற லீலை.
செப்டம்பர் 13 பதினொன்றாம் திருநாள் சட்டத்தேர், (8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள்). இரவு ஸ்பதாவரணம் துலா லக்னம்.
செப்டம்பர் 14 பன்னிரண்டாம் திருநாள் தீர்த்தம் உற்சவ முடிவு.
உற்சவ நாட்களில் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் தங்கக்கவசம், வைரக்கீரிடம் சாத்துப்படியும், உபய திருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடத்தப்படுவதில்லை. ஆகஸ்டு 27ம் தேதி முதல் திருநாள் முதல் காலை, மாலை இரண்டு வேளையும் ஆவணி மூலவீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா, மண்டகப்படிகளில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
Leave a Comment