மெய் ஞானத்தை அறிந்துணர்ந்து கொள்ள இறைவன் படைத்த தமிழ் மொழி....
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமந்திரம் - எளிய விளக்க உரை - 9
ன்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவஞ் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.
(திருமந்திரம் - திருமூலர் வரலாறு)
விளக்க உரை:
இறைவனை
அடைய
தவமே
பிரதானம்.
இறுதிக் காலத்தில் தவம் செய்து இறைவனை
அடைந்து விடலாம் என்றிருப்பது தவறு.
சாகப் போகும் தருவாயில்
'சங்கரா... சங்கரா..'
என ஜெபிப்பதில் அர்த்தமில்லை.
உரிய காலத்தில்
தவம் இயற்றாதவர்களே மீண்டும் மீண்டும் பிறவி பெறுவர்.
வினைகளை ஒழித்து பிறவா நிலை பெற ஈசனை
நினைந்து நினைந்து தவம் செய்ய வேண்டும்.
என் தவப் பயன் காரணமாகவே இறைவன்
எனக்கு
இப்பிறவியை வழங்கி மீண்டும் பிறவாத
மரணமிலாப் பெருவாழ்வும் தந்து மெய் ஞானத்தை
வாரி வழங்கி
என்னைப்
பூமியில் படைத்துள்ளான்.
எதற்குத் தெரியுமா ?
அவன் அருளிய அனைத்தையும் தமிழில் மந்திரமாக திருமந்திரமாக செவ்வனே படைப்பதற்காகவே.
இத் திருமந்திரத்தில் ஓர் அருட் செய்தி புதைந்து கிடக்கிறது.
திருமூலரை
இறைவன்
ஏன் படைத்தான் ? எதற்காகத் தமிழில் எழுதச் சொன்னான் ?? என்பதற்கான பதிலில்தான் அந்த புதையல் உள்ளது.
வேறெந்த மொழியிலும்
காணக் கிடைக்காத உணர முடியாத
மெய் ஞானத்தையும் சாகா கல்வியையும் அறிந்துணர்ந்து கொள்ள
ஏக இறைவன்
தேர்ந்தெடுத்துப்
படைத்த
ஒரே மொழி
தமிழ் மொழியே.
அதன் பொருட்டே இறைவன்
திருமூலரைப் படைத்தான்...
அவரைக்
கருவியாகக் கொண்டு திருமந்திரம் படைத்தான்.
மெய்ஞானம் பெற உகந்த ஒரே மொழி தமிழ்மொழி என்பதே இத் திருமந்திரத்தில் புதைந்து கிடைக்கும் புதையல் தகவல்.
Leave a Comment