திருவடியாய் நிற்கும் ஜோதியே போற்றி...
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமந்திரம் எளிய விளக்க உரை 5
போற்றி என்பார் அமரர் புனிதன்அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி
போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே.
(திருமந்திரம்- கடவுள் வாழ்த்து)
இன்ப வேட்கை கொண்ட வானுலக அமரர் இன்பம் பொருட்டு தூயவனாகிய சிவனின் திருவடியைப் போற்றித் துதித்திடுவர்.
பொருள் வேட்கை கொண்ட கொடியவர்களான அசுரர்களும் பொருளுக்காக அவன் திருவடியைப் போற்றி தொழுதிடுவர்.
அருள் வேட்கை கொண்ட மண்ணுலக மனிதர்களும்
அருள்
வேண்டி
புனிதன் திருவடியைப் போற்றி வணங்கிடுவர்.
சித்த வேட்கை கொண்ட
நானும் தவநிலையில் அவனைப்
போற்றி
துதித்து
தொழுது
வணங்கி
என் அன்பெனும் பிடியில்
அவனை அகப்படுத்தி
அவன்
திருவடியாய் நிற்கும்
ஜோதியைப் போற்றி பொலிவுடன் வைத்திருந்தேனே.
சிவனது திருவடியை உள்ளத்தில் ஏந்தி அவனை உணர்ந்து
அளவுகடந்த அன்போடு
வணங்க வேண்டும் என்பதே இம்மந்திரம்
உரைக்கும் தந்திரம்.
Leave a Comment