ராமன்...அனுமனுக்கு கூறிய விளக்கம்!
ராமதாசர் ராமாயணத்தை எழுதும்போது தன்னுடைய சீடர்களுக்கும் கதையைச் சொல்வார். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் மறைவாக வந்து அமர்வார் என்பது ஐதீகம். ஒரு முறை அனுமன் ராமதாசரின் அருகே அமர்ந்து கதையைக் கேட்டார்.
அனுமன் அசோகவனத்தை அடைந்து வெள்ளை நிற பூக்களைப் பார்த்தார் என ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். மறைந்திருந்த அனுமானுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர், ராமதாசரின் முன்னால தோன்றி. "நான் சிவப்புப் பூக்களை அல்லவா பார்த்தேன். நீங்கள் தவறாக எழுதியருக்கிறீர்கள். அதைத் திருத்துங்கள்" என்றார். ராமதாசர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் ராமபிரானிடம் சென்றது. அவர் அனுமானிடம். "ஆஞ்சநேயா! நீ பார்த்த பூக்கள் வெள்ளைதான். ஆனால், உன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தமையால் அவை உனக்கு சிவப்பாய்த் தோன்றின" என விளக்கினார்.
நாம் இந்த உலகை எந்த நோக்குடன் பார்க்கிறமோ, அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பது இந்தக் கதையின் கருத்தாக அமைந்துள்ளது!
Leave a Comment