நேர்த்திக்கடன்...பரிகாரங்கள் வித்யாசம்!


பலனை அனுபவித்தபின் அதற்குப் பிரதிபலனாக வேண்டியிருந்தபடி இறைவனுக்கு நன்றியைச் செலுத்துவது நேர்த்திக் கடனாகும். இந்தக் கடனை சொல்லியபடி சரிவரச் செய்து முடிக்காவிட்டால் சோதனைகள், பாதிப்புகள் ஏற்படும் என்பர்

பரிகாரம் என்பதோ சோதனைகள், பாதிப்புகள், தடைகள் ஏற்பட்டுவரும்போது அவற்றை நிவர்த்திப்பதற்காகவும், எடுத்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவதற்காகவும், நினைத்த காரியங்கள் தங்குதடையின்றி நடந்து நன்கு ஈடேறுவதற்காகவும் செய்யப்பெறும் பூஜைகள், சடங்குகள், யாகங்கள், கழிப்புகள், மந்திரங்கள், பலிகள், விரதங்கள் போன்றவற்றைச் செய்வதாகும். பரிகாரங்கள் சாமிக்கு மட்டுமல்ல ஆவிகள், தேவதைகள், துர்தேவதைகள் போன்றவற்றிற்கும் செய்யப்பெறும், அதாவது, சுருக்கமாகச் சொன்னால்...

திருப்தியடைந்தபின் செய்வது நேர்த்திக் கடன், திருப்தியடைய வேண்டிச் செய்வது பரிகாரமாகும். பொதுவாக இரண்டுமே நம் காரியம் நடக்க நடத்தப்பெறும் 'பேரங்கள்' என்று கூடக் கூறுவர்...ஆனால்...இரண்டிலுமே முறைப்படி நடக்காவிடில் பாதிப்புகள் ஏற்படலாம்.



Leave a Comment