கோபுர தரிசனம்...கோடி புண்ணியம்!


'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பார்கள். ஒரு கோயிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோயிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும்.

கோயிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம் 'ஸ்தூல லிங்கம்' எனப்படும். இது தொலைவில் இருப்பவர்களும் கண்டு வழிபடும்படியாக அமைந்துள்ளது.

இந்த வகை ராஜ கோபுரங்கள் 3, 5, 7, 9, 11 என்னும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகள் உடையதாக அமையும்.

இக்கோபுரத்தில் பல்வேறு வகையான வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். ராஜ கோபுரம் நம் கண்ணில் பட்டதும் கைகூப்பி வணங்க வேண்டும்.



Leave a Comment