ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா 


குருபரிகார ஸ்தலமான ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூா்த்தி தனிசன்னதியில் எழுந்தருள அங்கு ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனா்.

ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா். லட்சார்ச்சனை தொடக்க விழாவில் அறநிலைய உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலா் பி.தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

இந்த முதல் கட்ட லட்சார்ச்சனை வரும் 27 ம்தேதி வரை நடைபெறும் .மீண்டும் குருபெயா்ச்சிக்குப்பின் அக்டோபா் 31ம்தேதி தொடங்கி நவம்பா் 7ம்தேதி முடியவும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறும். 

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

 இவ்வாண்டும் குருபகவான் வரும் அக்டோபா் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.
 



Leave a Comment