மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.... வீடியோ
புரட்டாசி சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசை திதி வந்தது சிறப்பாக கருதப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை மஹாளய அமாவாசை வந்ததையடுத்து 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புரட்டாசி 2 வது சனிக்கிழமை அன்று அமாவாசை தர்பணம் கொடுப்பது சிறப்பு பெற்றதாக கருதுகிறார்கள்.
இந்துகளின் புனித நாளான மஹாளய அமாவாசையான இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரகனக்கான இந்துக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தி வணங்கினார்கள்.
மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் குளத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மஹாளய அமாவாசை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசை வருவதால் வீரராகவப் பெருமாளை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரம் நிரம்பி வழிந்தது.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. மதுரை மாவட்டம் . திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் சரவண பொய்கை தெப்பகுளத்தில் புரட்டாசி மாத மஹாலய அமவாஸையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் எனும் "பித்ரு " சாந்தி செய்து கொண்டனர்.
திருவொற்றியூரில் மஹாளய அமாவாசை தர்ப்பணம் செய்வதற்காக கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பவித்ரா ஜோதி மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவசமாக ஆண்டுதோறும் திருவெற்றியூர் திருச்சினாம் குப்பம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆறுகளிலும் குளங்களிலும் கடற்கரையிலோ தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் சென்னையில் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாத நிலையில் கோவில்களில் சத்திரங்களில் தர்பணம் கொடுத்து வருகிறார்கள்.
நம் முன்னோர்களுக்கு அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற்று முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை அதிலும் காசியில் ஓடும் நதிக்கரையில் அல்லது ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் இதனைத் தீர்ப்பதற்கு காசிக்கோ ராமேஸ்வரதுக்கோ ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடியும் என்பதனால் ஏழை எளியவர் வசதி படைத்தவர் யாவரும் ஒரே இடத்தில் இலவசமாக திதி கொடுக்க ஏதுவாக சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் கடலில் காசி விஸ்வநாதர் கோயில் மூழ்கிய இடத்தில் தர்பணம் கொடுப்பது காசியில் தர்பணம் கொடுத்த பலனை தரும் என்பதால் கடற்கரையில் எள்ளும் தண்ணீரும் கரைத்து முன்னோர்கள் ஆசியை பெறுவதற்க்காக ஏராளமானோர் குவிந்தனர்
Leave a Comment