திருமணத் தடைகள் நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்
திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர்.
ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது. ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.
ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.
இந்த திருமணத் தடைகள் நீங்க சித்தர்களின் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் ஹோமங்கள் நடத்தியவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இதில் பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும், ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும் நடத்தி அதன் பலன்கள் கிடைக்க செய்துள்ளார்.
சுருளிமலையில் செய்த யாகங்கள் அனைத்தையும் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார். இதனால் இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.
திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார்.
சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
Leave a Comment