பிள்ளைகள் கல்வியில் சிறக்க...சாரதா தேவி மந்திரம்!
குழந்தைகள் கல்வியில் பிரச்சினையே ஞாபக சக்தியின்மைதான். இதற்குப் பலவகைப் பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிகவும் முக்கியம். ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரத்தைப் படிக்க வேண்டும்.
ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி!
சகலகலாவல்லி சாரபிம்பாதரி!
சாரதாதேவி சாஸ்திரவல்லி!
வீணா புஸ்தகராணி வாணி!
கமலபாணி வாக்தேவி வரநாயகி!
புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே!
மந்திரத்திற்கான பொருளை அறியலாம். கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே! சகல கலைகளுக்கும் தலைவியே! பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே! 'சாரதை' என்னும் வீணையை ஏந்தியவளே! சாஸ்திரங்களுக்கு அரசியே! இசைக்கும், இனிய நூல்களுக்கும், பாட்டுக்கும் தலைவியே! வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே! நல்ல சொற்களுக்குரியவளே! விரும்பிய வரங்களைக் கொடுப்பவளே! புத்தகத்தைக் கையில் உடையவளே, நல்லறிவு தருபவளே! உன்னை வணங்கி போற்றுகின்றேன்.
Leave a Comment