படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வணங்க வேண்டிய கடவுள்!
ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.
சிலருக்குக் கிரக நிலைகள் காரணமாக படிப்புக்கேற்றபடி நல்ல வேலை அமையாமல் சிரமப்படுவார்கள். அவர்கள், மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம்.
தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.
நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல காலேஜில் சீட் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் நாத்தனாரின் மகனையோ, கொழுந்தனாரின் மகளையோ நம்மால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.
Leave a Comment