இது சிவ அவதாரம்..
விஷ்ணுவின் தசாவதாரம் நாம் அறிவோம். அது என்ன சிவ அவதாரம்? ...
சிவனின் ஒரே அவதாரம் சரபா அவதாரம். சிவனின் திருவிளையாடல் 64 என்பதை நன்கு அறிவோம். அழிக்கும் கடவுளான சிவன், காக்கும் கடவுளான விஷ்ணுவை காத்த நிகழ்வே
சரபா அவதாரம் ஆகும்.
மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் மிக உக்ரமான அவதாரம் நரசிம்மாவதாரம். ஏனெனில் இந்த அவதாரம் தான் திடீரென எடுக்கப்பட்ட அவதாரம். ஒரு பக்தனின், பக்தியின் வலிமையை பற்றி உலகறிய செய்த அவதாரம். நரசிம்மரின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். புருவங்களில் லக்ஷ்மி இருப்பதாக ஐதீகம்.
விஷ்ணுவின் நரசிம்மவாதரத்தின்போது, இரண்யகசிபுவை வதைத்த பிறகும் பகவான் மிகவும் மூர்கமாகவே இருந்தார். அதற்கு காரணம் இரண்யகசிபுவின் இரத்தம் மகாவிஷ்ணுவின் உடம்பில் இருந்ததேயாகும். நரசிம்மவாதாரத்தின் ஆவேசத்தை கண்ட மூவுலகமே பயத்தில் நடுங்கின. இந்த நிலையில்தான் மகாவிஷ்ணு தனது ஆத்மாவை விடுவிக்க சிவனிடம் உதவி கோரினார்.
அப்போது சிவன் 4 கைகள், 8 கால்கள், 2 முகமும் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக தோன்றினார். அந்த அவதாரமே சரபா அவதாரம். நரசிம்மருடன் பெரும் யுத்தம் நடந்தது. நரசிம்மரின் உடலில் கலந்து இருந்த இரண்ய கசிபுவின் அசுத்த ரத்தத்தை பிரித்து மகாவிஷ்னுவை சாந்தப்படுத்தினார் சரபா அவதாரத்தில் இருந்த சிவன். இந்த அவதாரத்தில் சக்தியின் பெயர் அரிப்ரணாசினி.
- ரம்யா சுரேஷ்
ரம்யா சுரேஷ் - சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள - sangemahathi@gmail.com
Leave a Comment