சபரிமலையில் புதிய கொடிமரபீடம்....
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செய்யப்பட்ட புதிய கொடி கொடிமரபீடம் செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திலிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பத்தனம் திட்டை வனப்பகுதியில் இருந்து கொடிமரம் அமைப்பதற்கான மரத்தடி வெட்டி எடுத்துவரப்பட்டது. பம்பையில் மூலிகை தொட்டியில் மூழ்கடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மரத்தடியை தங்க தகடுகள் பதித்து தற்போது கொடிமரமாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி புதிய தங்க கொடி மரம் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
தங்க கொடிமரத்திற்கான பீடம் அமைக்க தஞ்சை மாவட்டத்தில் இருந்து பெரிய பாறாங்கல் பத்தனம் திட்டா அருகே உள்ள செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அழகிய வேலைபாடுகளுடன் கொடி மர பீடம் தயாரானது.
இந்த கொடிமர பீடம் அங்கிருந்து இன்று காலை சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு புனிதநீர் தெளித்து பூஜை செய்தபிறகு கொடி மர பீடம் ஊர்வலம் தொடங் கியது.
இன்று மாலை பம்பை கணபதி கோவிலை இந்த பீடம் சென்றடையும். அங்கு விசேஷ பூஜைகளுக்கு பிறகு அந்த பீடம் சபரிமலை சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
Leave a Comment